கோதுமைரவை இனிப்புப் பொங்கல்
தேவையான பொருட்கள் :
கோதுமைரவை , வெல்லம் - தலா ஒரு கப்,
பயத்தம் பருப்பு, (பாசிப்பருப்பு)
தேங்காய்ப்பால், நெய் - தலா கால் கப்,
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
2. அதனுடன் கோதுமைரவையையும் சேர்த்து, இரண்டும் நன்றாக குழையுமாறும் அடி பிடிக்காதவாறும் கவனமாய் வேக விடவும்.
3. மற்றொரு அடுப்பில், அழுக்கு நீக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, இளம்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
4. இதை பொங்கலுடன் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு கிளறவும்.
5. பொங்கல் தளர்வாக இருக்க வேண்டும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி நன்றாகக் கிளறி, இறக்கவும்.
சுவையான கோதுமைரவை இனிப்புப் பொங்கல் தயார்.
No comments:
Post a Comment