Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

Saturday, September 11, 2021

கேரட் சாறு (ஜூஸ்)

 

கேரட் சாறு (ஜூஸ்) நன்மைகள்

கேரட் சாறு என்பது கேரட்டிலிருந்து எடுக்கப்படும் சாறு ஆகும். கேரட் சாறு அதிக அள்வு வைட்டமின் ஏ, β- கரோட்டின் உள்ளது. இருப்பினும் வைட்டமின் பி மற்றும் அது சார்ந்த ஃபோலேட் , மற்றும் கால்சியம், செம்பு, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல கனிமங்கள் கொண்டுள்ளது. இது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை ஒப்பிடும்போது குறைந்த மகசூல் உடையது. கேரட்டின் தன்மை சற்று கடினமானது. கேரட் சாறு அதன் கூழ்மதிலிருந்து பிரிகிறது.


பீட்டா-கரோட்டின் அதிகமாக இருக்கும் பல தயாரிப்புகளைப் போலவே, இது தற்காலிக காரோடெனோடெர்மா, தீங்கற்ற ஆரஞ்சு மஞ்சள் நிற தோல் உள்ளது.

24-மணி நேர நேரத்திற்குள் 3 கப் கேரட் சாறு குடித்து, நீண்ட காலத்திற்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கலாம்.

கேரட் சாறு ஓர் அடர்த்தியான கூழ்மம், இனிப்பு சுவையை கொண்டுள்ளது. பல சாறுகள் போலல்லாமல், இது ஒளிபுகா தன்மையுடையது. இது ஆரோக்கிய பானம் ஆகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கேரட்டிலிருந்து,சூப் மற்றும் கேரட் சாறு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா கேரட் சாறுகளில் முதன்மையான நிறங்கள் பாலாடைக்கட்டி ஒரு கறுப்பு நிறம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.


ஊட்டச்சத்து 


1 கப் கேரட் சாறு (236 மில்லி) 

கலோரிகள்: 95

கொழுப்பு: 0.35

கார்போஹைட்ரேட்டுகள்: 21.90

நார்ச்சத்து: 1.9

புரதம்: 2.24

கொலஸ்டிரால்: 0.010



Monday, February 1, 2021

உணவே மருந்து -3

 


                     உணவே மருந்து  -  3


               வெந்தயம்


              வெந்தயத்தில் உள்ள அல்காலைட்ஸ் எனும் பைட்டோ கெமிக் கல்ஸ், உணவினால் ஏற்படும் அஜீரணத்தை விரட்டி ஜீரணத்தை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண்களைக் குணப்படுத் தும். ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதிலுள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்துக் கொதிக்கவைத்து அதில் தேன் சேர்த்து தினமும் பருகி வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறையும். மேலும் இது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும். தாய்ப் பால் ஊட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது. பொடுகுத் தொல்லை சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும், வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வெப்பத்தினால் வரும் உடல் சூடு குறையும், ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இதற்கு முக்கியப் பங்குண்டு.


                எள்ளு


            அயர்ன, மெக்னீசியம், மாங்கனைஸ், காப்பர், விட்டமின் பிடஎன்று அதிக சத்துக்களை உள்ளடக்கிய எள்ளு ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழ மொழி. அதாவது எள்ளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் பலம் கூடும். மேலும் இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வளர் இளம் பெண்களுக்கு உடல் பலத் தைத் தரும் எள்ளு கலந்த உணவுகள் அவசியம் தேவை. ஆனால் இது கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளை அகற்றும் செயல்புரிவதால் கர்ப்பிணிப்பெண்கள் ஐந்து மாதம் வரை எள்ளைத் தவிர்ப்பது நல்லது. காலையில் ஒரு பிடி என்ளை ஊறவைத்து உண்பது நல்லது அப்படி முடியாதவர்கள் எள்ளுருண்டை , எள்ளுப்பொடி, எள்ளு சாதம் என்று எள்ளை அன்றாடம் நாம் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பெறலாம்.


           கொள்ளு



             கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழிக்கு ஏற்ப உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ஊளைச்சதையையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது உடலுக்கு வெப்பத்தைத் தரக் கூடிய உணவுப்பொருள் என்பதால், வாரம் ஒரு முறை சேர்க்கலாம் உணவில் சேர்த்து பாதிப்புகள் இல்லை எனும்போது உடல் எடை குறைய தினம் பயன்படுத்தலாம். இதில் இரும்புச்சத்து உள்ளதால் பெண்களின் மாதவிடாய் ஒழுங்குக்கும் சிறந்த தீர்வாகிறது. கொள்ளும், அரிசியும் சேர்த்துச் செய்யும் கஞ்சி பசியைத் தூண்டும் அரிசியையும், கொள்ளையும் வறுத்து, குக்கரில் வேகவைத்து, உப்பு சீரகம் சேர்த்துக் கஞ்சி வைத்து, புதினாத் துவையலைத் தொட்டுக் கொள்ளலாம், ஏனெனில் புதினாவின் குளிர்ச்சித் தன்மை கொள்ளு வில் உள்ள வெப்பத்தைச் சமன்படுத்தும். கொள்ளை இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரைக் குடிக்கலாம், இதில் மாவுச்சத்து உள்ளதால் சுண்டல் செய்தும், வேகவைத்தும் சாப்பிடலாம்.


                சீரகம்



               நம் அகத்தைச் சீர்செய்வதில் சீரகம் இணையற்றது இதிலுள்ள டேனின், நெகிலின் போன்ற சத்துக்கள் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன இதை நீரில் கொதிக்கவைத்து அருந்தும் போது கிடைக்கும் பலன்கள் அதிகம், காமாலை, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து. கேன்சர் வராமல் தடுக்கும். ஷகரைக் கட்டுக்குள் வைக்கும். மோரில் கலந்து குடித்தால் உடனடியாக உடல் வெப்பம் குறையும். காய்ச்சலுக்குச் சரியான தீர்வு. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி உடலைச் சமநிலைப்படுத்தி எடையைச் சீராக வைத்திருப்பதில் சீரகம் பெரும் பங்குவகிக்கிறது. ஒரு லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க, சிறுநீர்ப் பிரச்னைகள் குறையும், தினமும் சீரக நீரை அருந்தினால் கண்டிப்பாக நம் உடல் நலம் சீராகும்.


பெருங்காயம்


  
       பெருங்காயத்தில் மாலிக் ஆசிட், வோலெட் போன்ற சல்பைடு கள் உள்ளதால் வாயுத்தொல்லைக்கு அருமருந்தாகிறது. கல்லீரல் வீக்கம், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்றவை களுக்கு நிவாரணமளிக்கும். இதன் குளிர்ச்சித் தன்மை உடல் வெப் பத்தைக் குறைக்கும். வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும் தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் எளிதில் ஜீரணமாகி மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாக்கும். குடல் புழுக்களை அழித்து, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் போன்றவை வராமல் காக்கிறது. வெயில் காலத்தில் உணவுகளால் வரும் ஒவ்வாமையை நீக்கி உடலைக் கட்டுக்குள் வைக்கிறது. தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை உடலுக்குச் சேர்ப்பது நல்லது.



            மிளகு


            பத்து மிளகு இருந்தால் பகையாளியும் உறவாவான். பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் மிளகைப் பயன் படுத்தலாம். இதன் பலன்களும் அதிகம், இதில் உள்ள பெப்டின் எனும் வேதிப்பொருள் நச்சுத்தன்மை நீக்கும் குணம் கொண்டது. இது ஆஸ்துமா, மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் அனைத்து வகையான உடல் வலிகளுக்கும் அருமருந்தாகும் உணவினால் ஏற்படும் விஷத் தன்மையை நீக்கும். இதன் வெளிப்புற அடுக்கு கொழுப்பின் காரணமாக உடலில் உருவாகும் கட்டிகளை முறிப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரு கிறது. வெயிலினால் உடலில் சேரும் வியர்வையை வெளியேற்றி எளிதில் சிறுநீரைக்கழிக்க உதவுகிறது. இதிலுள்ளஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றுப் பிரச்னைகளைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. சுடுநீரில் மிளகுத்தூள், மஞ்சள் சேர்த்துக் குடித்தால் சளித்தொந்தரவு, காய்ச்சல் சரியாகும்.


              கிராம்பு



            எங்கு பார்த்தாலும் கேன்சர் பரவும் அபாயம் இருப்பதால் அந் நோயைத் தவிர்க்க நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டிய மருந்துப்பொருள் இது இதிலுள்ள வோலடைல் எனும் எண்ணெய் போன்ற சத்துப் பொருள் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து உடல் நலனைக் காக்கிறது. சிறந்த வலி நிவாரணியாகவும் பயன் தருகிறது இது பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும், வாய் துர்நாற்றத்தையும் போக்கும், அல்சர், கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் இதிலுள்ள ஏராளமான வேதிப்பொருள்களும், விட்டமின்களும் உடலில் தோன்றும் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் அன்றாடம் நம் சமையலில் சேர்க்கும் கிராம்பு, நறுமணத்தைத் தந்து எளிதில் உணவு ஜீரணிக்கவும் உதவுகிறது, கிராம்புகளை நீரில் கொதிக்கவைத்துத் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும். உடல் எடை குறைப்புக்குக் கிராம்பு நேரிடையாகப் பயன்தராமல் மறைமுகப் பொருளாகப் பயன்படுகிறது, காரணம் உடலின் நச்சுத்தன்மையைக் நீக்கி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.


                மஞ்சள்


              மிகச்சிறந்த கிருமிநாசினி மஞ்சள், இதில் குக்குமின் ஜிஞ்சரோல் போன்ற வேதிப்பொருள்களுடன் விட்டமின் பி.எ சத்தும் நிறைந்திருப்பதால் இது சிறந்த ஆன்டி பயாட்டிக்காகச் செயல்படுகிறது. கேன்சர் வராமல் தடுக் கிறது. கொப்புளங்கள், சிழ்க்கட்டிகளைக் குணப்படுத்துகிறது. குளிக்கும் போது நீரில் கலந்தோ அல்லது உடலில் பூசியோ குளித் தால் உடல் துர்நாற்றம் வராது ஹீமோபிலியாவினால் பாதிக்கப் பட்டவர்கள் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும், மூட்டு வலிக்கு மஞ்சள் அரைத்துப் பற்றுப் போடலாம். பெருங்காயத்தூளுடன் மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆவிபிடித்தால் ஒற்றைத் தலைவலி மறையும். மஞ்சளுடன் வேப்பிலைக் கொழுந்துகளை அரைத்துப் பூசினால் வெயிலினால் தோன்றும் கொப்புளங்கள் போன்ற சருமப் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும், சுடுநீரில் கலந்து குடிக்கும் போது காய்ச்சல், சளிக்கு உடனடி நிவாரணம் தரும். இதிலும் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்து இருப்பதால், இதை அன்றாடம் நம் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.










உணவே மருந்து - 2

 


                             உணவே மருந்து - 2


                         மாதுளம் பழம்



             இதிலுள்ள கால்சியம், கேலிக் ஆசிட் போன்ற சத் துக்கள் எலும்புகள், பற்கள், ஈறுகளுக்கு மிகவும் நல்லது ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்தசோகையைத் தடுக்கிறது. மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் தொண்டை வலி, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மாதுளம் பிஞ்சுகளை அப்படியே கடித்துச் சாப்பிட்டால் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். ஒபிசிட்டியைக் குறைத்து எடையைச் சீராக வைக்கிறது. அப்படியே பற்களினால் மென்று சுவைப்பது மிகவும் நல்லது. இதை ஜூஸாகவும் அருந்தலாம். சுவைக்குச் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.


                  தர்ப்பூசணிப் பழம்




               மிக எளிதாகக் கிடைக்கும் கோடை காலப் பழம் இது. இதில் உள்ள மெக்னீசியம், அயர்ன் போன்ற தாதுப்பொருட்கள் ஆன்டி அக்கி டென்ட்டாகச் செயல்பட்டு சருமத்தில் உள்ள செல்களைப் புதுப் பித்து இளமையாக இருக்க உதவுகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் செரிமானக் கோளாறுகளைச் சரிப்படுத்தும் அற்புதக் குணம் கொண்டது. உடல் எடையைக் குறைப்பதிலும், இழந்த நீர்ச்சத்தை மீட்டுத் தருவதிலும் முதலிடம் வகிக்கிறது. இதைத் துண்டுகளாக்கி, மிளகு சேர்த்தும் சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் எடுத்து சிட்டிகை மிளகு, உப்பு சேர்த்து அருந்தலாம். பொதுவாக, பழவகை களை அதன் தன்மை மாறாமல் அப்படியே சாப்பிடும் போது மட்டுமே முழுமையான பலன்களைப் பெற முடியும்.


திராட்சைப் பழம்




               திராட்சையில் உள்ள டேனிக் ஆசிட், மாலிக் ஆசிட் ஆகியவை சருமத்தின் உலர்த்தன்மையை நீக்கி ஈரத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. தினசரி கறுப்பு திராட்சையைக் குறிப்பிட்ட அளவு சாப் பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன் மலச்சிக்கல் நீங்கி உடலுக் குத் தேவையான புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. நாளமில்லாச் சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும் திறன்கொண்ட இப்பழத்தை அல்சர் நோயுள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இதை விதையுடன் அரைத்து, வடிகட்டி அருந்த கேன்சரைத் தடுக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும், மேலும் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.


         நாட்டுக் கொய்யாப் பழம்




                ஆப்பிளை விட விலையில் குறைந்தது சத்துக்களில் உயர்வானது நம் வார்ப் பழமான கொய்யாப் பழம், அதிக மான விட்டமின்களுடன் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பேட் மற்றும் நார்ச்சத்து கொண்டது இதைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கொய்யாப் பழத்தை நறுக்கி மிக்சியிலிட்டு அரைத்து, வடிகட்டி அதனுடன் தேன் கலந்து அருந்தி னால் உடலுக்கு வலு தந்து சோர்வைப் போக்கும் ஜூஸ் செய்தால் அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அழிந்துவிடும் அபாயமுண்டு, ஆண்கள் மதுவின் பிடியிலிருந்து மீண்டு வர உதவுகிறது. தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல் நோயிலிருந்து தப்பலாம். மெனோபாஸ் நிலையிலிருக்கும் பெண்களுக்குச் சிறந்தது. நம் ஊரின் தட்பவெப்ப நிலைக்கேற்ற டயட் பழம் இது.



                   மாம்பழம்



                அனைவரும் விரும்பும் பழம் இது. இதிலுள்ள விட்டமின் ஏ ஆன்டி ஆக்சிடென்ட்டாகச் செயல்பட்டு நம் உடலுக்கு ஆரோக்கியத் தைத் தருகிறது. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட, தோல் பளபளப்பாகும். சருமத்தில் வரும் அரிப்பு, தலைவலி போன்றவை குணமாகும். இதிலுள்ள நார்ச்சத்து ஜீரணத்தைப் பெருக்கி சிறந்த மலமிலக்கியாகிறது. மாம்பழத்தை மட்டுமல்ல பொதுவாகவே பழங்களுடன் பால் போன்றவைகள் சேரும்போது அதிலுள்ள கலோரிகளின் அளவு அதிகரிக்கும். இத னால் எடையைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பழங்கள் இழந்து விடுகின்றன. அளவுக்கதிகமாக மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வேண்டுமானால் சுவைக்காக மாம்பழத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஜூஸாக்கித் தரலாம். இதனால் உடல் எடை கூடும்.


             வெள்ளரிக்காய்



           கோடை சீசனில் கிடைக்கும் வெள்ளரிக்காய்களை அரைத்து அதனுடன் நாட்டுச்சக்கரை சேர்த்து ஒரு கோப்பை வீதம் காலை, மாலை ஒரு மாதம் பருகி வந் தால், உடல் எடை கட்டுக்குள் வரும், தொடர்ந்து சாப்பிடும் போது இதிலுள்ள தாதுப்பொருட்கள் உடல் வெப்பத்தைக் குறைத்து, கருவளையம் மற்றும் குழி விழுந்த கண்கள் போன்ற அழகு சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வைத் தரும் துண்டுகளாக்கிச் சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்தும் சாப்பிடலாம், இது குளிர்ச்சிப் பொருள் என்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் வெள்ளரிக்காய்களை எடுத் துக்கொள்வதால், குளிர்ச்சியைத் தந்து வெப்பத்தைத் தணிக்கும்.















உணவே மருந்து -1


                  உணவே மருந்து -1 

      

       கறிவேப்பிலை


                  நாம் உணவிலிருந்து தூக்கி எறியும் கறிவேப்பிலையில் உள்ள கால்சியம், அயர் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் ரத்தசோகையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, இஞ்சி இவை மூன்றும் ஜீரணத்துக்கு நம் வீட்டிலேயே இருக்கும் அருமருந்துகள். சிறுநீர்ப் பிரச்னைகள், வாந்தி, சருமப் பிரச்னைகள் போன்றவற்றைச் சரிசெய்யும். தலைமுடி வளர்ச் சிக்கு உதவுகிறது. உணவில் தினமும் சேர்க்கும் போது இதன் குளிர்ச்சித்தன்மை கோடையில் வரும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வா கிறது. பொடி செய்தும், சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்துத் துவையல் செய்தும் சாப்பிடலாம். அனைத்துக் காய்கறிகள் சமைக்கும்போதும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை களைத் தூக்கி எறியாமல் சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கி வாயு போன்ற தொல்லைகளைத் தவிர்க்கும். இதையும் அரைத்து, பனங்கற் கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடல் எடை குறையும்.


              புதினா


                 நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சைக்கு ஈடான மருத்துவக் குணம் கொண்டது புதினா, இதிலுள்ள விட்டமின் சி மற்றும் மென்தால் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னை சுளுக்கு நல்ல தீர்வைத் தரும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் நறுமணம் வாந்தியைக் கட்டுப்படுத்தும் என்பதால், கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் நல்லது. வெப்பத்தினால் வரும் மூல நோய்க்கும், நரம்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தா கிறது. பசியைத் தூண்டும், புதினாவை எப்படிப் பயன்படுத்தினாலும் அதன் சத்துக்கள் அழியாது என்பது இதன் தனிச் சிறப்பு. புதினாவை நிழலில் உலர்த்திப் பொடித்து, ஒரு பிடியை ஒரு லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50மி.லி. அருந்தினால் காய்ச்சல் குணமாகும். உணவுக்கு முன் புதினாவை சுடுநீரில் போட் டுக் கொதிக்கவைத்து அதை வடிகட்டி அதனுடன் தேன், நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும்.


               சின்ன வெங்காயம்



                    சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத் தில் மருத்துவக் குணங்கள் அதிகம். இதிலுள்ள சல்பைடு, தைலான்ஸ், பைநோல் போன்ற வேதிப்பொருள்கள் உடல் நலனுக்கு உகந்தது. இதன் சாறு விஷத்தன்மையை நீக்கும். பூச்சிக்கடிகளுக்கு உடனடி நிவாரணமாக, கடிபட்ட இடத்தில் இதைத் தேய்ப்பதன் மூலம் விஷத்தை முறிக்கலாம். வெங்காயத்தைக் கூடுமானவரை பச்சையாகச் சாப்பிட்டால் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும் முடியாதவர்கள் காய்கறிகளில் சேர்த்தோ , துவையல் செய்தோ சாப் பிடலாம். வெங்காயத்தில் குறைந்த அளவே கொழுப்புச்சத்து உள்ளதால் உடல் பருமனானவர்களும் தயங்காமல் இதை அதிகம் உணவில் சேர்க்கலாம். உடல் வெப்பம் குறையும். அதிகச் சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலிக்கு அற்புதமான மருந்து இது


              இஞ்சி



                 இஞ்சியில் உள்ள ஆல்பா/கூமின் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் பல நோய்களுக்கு மருந்தாகிறது ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தருகிறது. வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, நீர்ச்சத்துக் குறைபாடுகளைச் சரிசெய்கிறது. ரத்தநாளங்களில் படிந்துள்ள கொழுப்பை நீக்கும். இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சேரும் டாக்ஸின் எனும் நச்சுப்பொருளை அகற்றி ஆரோக்கியத்தைத் தருகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து பருகலாம். தேன் கலந்த இஞ்சிச் சாறு பலவற்றுக்கு நிவாரணமாக அமைந்தாலும், அதைத் தொடர்ந்து 40 நாட்கள் பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரைந்து தொப்பை குறையும். இதனால் உடல் எடை குறைந்து மெலிதான தோற்றம் பெறலாம். ஆனால், அதனுடன் உணவுக்கட்டுப்பாடும் அவசியம். இந்தச் சாறு அஜீரணத்துக்கும், வயிற்றுவலிக்கும் மிகவும் நல்லது. இஞ்சியின் மேல் தோலில் நச்சுப் பொருள் உள்ளதால் அவசியம் மேல் தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும்


                               பூண்டு 



                தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில்  சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும். மேலும் அது இரத்த  அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக்,  பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச  தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது. பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ  குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக  பாதிக்கப்படும்.  இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு  துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,  பூண்டை உணவாகவும், மருந்தாகவும்  பயன்படுத்தும் சரியான  முறையாகும்.