Showing posts with label வட இந்திய சமையல். Show all posts
Showing posts with label வட இந்திய சமையல். Show all posts

Monday, February 1, 2021

கத்தரிக்காய்ப் புலவு

 

                            கத்தரிக்காய்ப் புலவு


தேவையானவை


        பாஸ்மதி அரிசி  -  2 கப் ( 400 கிராம் )

        கத்தரிக்காய் -  4  (நடுத்தர )

        பச்சை மிளகாய் - 4 

        இஞ்சி  - ஒரு சிறிய துண்டு

        சீரகம் -  1/2 டீஸ்பூன் 

        கசகசா - 2 டீஸ்பூன்

        வறுத்த பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்

        சர்க்கரை -  1 டேபிள் ஸ்பூன்

        நெய் - 4 டேபிள் ஸ்பூன்

        உப்பு -  தேவையான அளவு 


செய் முறை

      1. அரிசியைக் களைந்து கழுவித் தண்ணீரை வடித்து விடவும். 

     2. விதையில்லாத கத்தரிக்காயைச் சிறு துண்டு களாக்கி 

         வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன்

     3.  பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கசகசா, பட்டாணி

          சேர்த்து வதக்கி, 

    4.  சர்க்கரை சேர்த்துப்பொன்னிற மானவுடன் கத்தரிக்காய் 

         மற்றும் உப்பைச் சேர்க்கவும்.

    5. அரிசியைக் கொட்டிச் சிறிய தீயில் வைத்து மூடி விடவும்,   

    6. அவ்வப்போது கிளறிவிட்டு அரிசி வெந்த பிறகு 

        அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.








ஸர்வாரி/

 

வட இந்தியச் சமையல்


                   ஸர்வாரி ( கொண்டைக்கடலை சாதம்)



தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி -   250 கிராம்

வெள்ளை கொண்டைக்கடலை -  100 கிராம்

சீரகம் -   அரை ஸ்பூன் 

நெய் - 50 கிராம்

இலவங்கம் - 2

சமையல் சோடா -  1/4 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு .


செய்முறை

      1. கடலையைச் சமையல் சோடா சேர்த்துப் போதிய அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் இரவு ஊறவைக்க வும். 

      2. மறு நாள் கழுவி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

      3. அரிசியைக் கழுவிக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் வேகவைத்து எடுக்கவும். 

      4. ஓர் அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் பரப்பி உப்பைத் தூவவும். 

      5.  வாணலியில் நெய்விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், இலவங்கம் தாளித்து சாதத்தின் மேல் பரவ வாகக் கொட்டவும். 

       6.  வேகவைத்த கடலையைச் சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி அடுப்பின் மேல் மேலும் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.








பாசிப்பயறு வடை

    

               பாசிப்பயறு வடை



தேவையான பொருட்கள்

  முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப்     

  பொடித்த ஜவ்வரிசி அரை கப்,     

  வறுத்து, தோல் நீக்கி ஒன்றிரண்டாக    பொடித்த வேர்க்கடலை - அரை கப், 

   மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், 

   கொத்துமல்லி, பச்சைமிளகாய்,        

    இஞ்சி விழுது தலா 1 டீஸ்பூன், 

  உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை: எல்லா பொருட்களையும் நன்கு கலந்து, வாழையிலை மேல் வடையாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வடையை


பொரித்தெடுக்கவும்