Showing posts with label தமிழ் நாட்டு சமையல். Show all posts
Showing posts with label தமிழ் நாட்டு சமையல். Show all posts

Monday, February 1, 2021

எலுமிச்சம் சாதம்

 

                               எலுமிச்சம் சாதம்




தேவையான பொருட்கள்: 

பச்சரிசி -2 கிலோ, 

எலுமிச்சம் பழம்-4 

கடலைப்பருப்பு-1 டேபிள் ஸ்பூன், 

கடுகு-1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிது, 

பச்சை மிளகாய்-6,

 நல்லெண்ணெய்-200 கிராம், 

முந்திரிப் பருப்பு-8, 

கறிவேப்பிலை, 

உப்பு - தேவையான அளவு


செய்முறை

    1. சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு, 1 டீஸ்பூன் 

         எண்ணெய் விட்டு ஆறவிடவும் 

    2. வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, 

         பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 

          மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். 

    3. எலுமிச்சம் பழச்சாற்றை உப்புத்தூளில் பிழிந்து கொண்டு, 

    4. தாளித்ததைச் சாதத்தில் கொட்டிக் கிளறி, 

       எலுமிச்சம் சாற்றையும் விட்டு நன்கு கலந்து கொண்டு, 

       மேலாக கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

எள் சாதம்

 


                                        எள் சாதம்


தேவையான பொருட்கள்: 

        பச்சரிசி 1/2  கிலோ, 

       எள்-100 கிராம், 

       காய்ந்த மிளகாய்-8, 

       உளுத்தம் பருப்பு-1 டேபிள் ஸ்பூன், 

       பெருங்காயத்தூள்-2 சிட்டிகை, 

       நல்லெண்ணெய்-200 கிராம், 

      கறிவேப்பிலை, 

       உப்பு - தேவையான அளவு


செய்முறை

     1. சாதத்தை உதிராக வடித்து உதிர்த்து வைக்கவும். 

     2. எள்ளை ஐந்து நிமிடம் ஊற வைத்து நன்கு களைந்து 

          தண்ணீரை வடிய விடவும். 

     3. வெறும் கடாயில் எள்ளைப் போட்டு, அவை படபடவென 

          வெடிக்கும் வரை விட்டு எடுக்கவும், 

     4. பின்னர் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, 

           உப்பு சேர்த்து 

     5 . எல்லாவற்றையும் மிக்ஸியில் நறநறப்பாக பொடி செய்யவும், 

      6 . ஆறிய சாதத்தில் எண்ணெய் விட்டு பொடியைப் போட்டுக் 

            கலக்கவும், மேலாக கறிவேப்பிலை தூவவும்.

        எள் சாதம் தயார்.

அதிரசம்

 

                                        அதிரசம்



        தேவையானவை

        பச்சரிசி - ஒரு கப், 

        வெல்லம்  - முக்கால் கப், 

        சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் -  தலா -  அரை டீஸ்பூன், 

        நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், 

         எண்ணெய் - பொரிக்க


செய்முறை

      1. அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

       2. பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை வெள்ளைத்துணியில் பரப்பி, நிழலில் நிமிடம் உலர்த்தவும்.

       3. பின்னர் அதை மாவாக அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.

        4.  ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். 

        5. வெல்லம் நன்றாகக்   கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் காய்ச்சவும்

         6.  உருட்டு பதத்தில் பாகு இருக்க வேண்டும் 

       (ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் வெல்லப்பாகை சிறிது விட்டால், அது கரையாமல், விரலால் திரட்டினால் அப்படியே உருண்டு வர வேண்டும். இதுதான் சரியான பதம்), 

          7. அரிசி மாவுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

         8.  பாகு சரியான பதம் வந்தவுடன் அரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறி மாவின் மீது லேசாக நெய் தடவி, காற்று புகாத டப்பாவில் ஒரு நாள் முழுக்க வைத்திருக்கவும் 

         9. மறுநாள் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நெய் தடவிய வாழை இலையில் வைத்துத் தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து அதிரசங்களிலுள்ள எண்ணெயை வடிக்கவும். 


             அதிரசம் தயார்.

வாழைக்காய் போண்டா

                 

     வாழைக்காய்   போண்டா



மேல் மாவுக்குத் தேவையானவை: 

    கோதுமை மாவு, சோள மாவு தலா கால் கப், 

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தலா அரை ஸ்பூன், 

பெருங்காயம் - கால் மஸ்பூன், 

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப


பூர்ணத்திற்குத் தேவையானவை

வேக வைத்து, உதிர்த்த வாழைக்காய் - 1 கப், 

காய்ந்த மிளகாய் - 5, 

கடலைப்பருப்பு - கால் கப், 

பெருங்காயம் கால் டீஸ்பூன், 

தேங்காய்த்துருவல், 

பொடியாக நறுக்கிய 

கொத்துமல்லி, கறிவேப்பிலை

- தலா அரை கப்


செய்முறை

   1. மேல் மாவுக்கான பொருட்களை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    2. காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு இரண்டையும் எண்ணெயில்லாமல் வறுத்தெடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் பொடிக்கவும். 

    3. இதனுடன் வாழைக்காய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கும் வரை மிக்ஸியைச் சுற்ற விடவும் 

   4. இதனுடன் தேங்காய்த்துருவல், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

  5. இந்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்தெடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


       சுவையான வாழைக்காய்  போண்டா தயார்.






கோதுமைரவை இனிப்புப் பொங்கல்

 

      கோதுமைரவை இனிப்புப் பொங்கல்




      தேவையான பொருட்கள் :

    கோதுமைரவை , வெல்லம் - தலா ஒரு கப், 

    பயத்தம் பருப்பு, (பாசிப்பருப்பு)

   தேங்காய்ப்பால், நெய் - தலா கால் கப், 

   ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன் 

    முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை தேவையான அளவு

   செய்முறை

      1. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை  வறுத்து, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். 

      2. அதனுடன் கோதுமைரவையையும் சேர்த்து, இரண்டும் நன்றாக குழையுமாறும் அடி பிடிக்காதவாறும் கவனமாய் வேக விடவும். 

     3. மற்றொரு அடுப்பில், அழுக்கு நீக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, இளம்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். 

      4. இதை பொங்கலுடன் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு கிளறவும். 

       5. பொங்கல் தளர்வாக இருக்க வேண்டும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி நன்றாகக் கிளறி, இறக்கவும்.

      சுவையான  கோதுமைரவை இனிப்புப் பொங்கல் தயார்.