Monday, February 1, 2021

கத்தரிக்காய்ப் புலவு

 

                            கத்தரிக்காய்ப் புலவு


தேவையானவை


        பாஸ்மதி அரிசி  -  2 கப் ( 400 கிராம் )

        கத்தரிக்காய் -  4  (நடுத்தர )

        பச்சை மிளகாய் - 4 

        இஞ்சி  - ஒரு சிறிய துண்டு

        சீரகம் -  1/2 டீஸ்பூன் 

        கசகசா - 2 டீஸ்பூன்

        வறுத்த பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்

        சர்க்கரை -  1 டேபிள் ஸ்பூன்

        நெய் - 4 டேபிள் ஸ்பூன்

        உப்பு -  தேவையான அளவு 


செய் முறை

      1. அரிசியைக் களைந்து கழுவித் தண்ணீரை வடித்து விடவும். 

     2. விதையில்லாத கத்தரிக்காயைச் சிறு துண்டு களாக்கி 

         வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன்

     3.  பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கசகசா, பட்டாணி

          சேர்த்து வதக்கி, 

    4.  சர்க்கரை சேர்த்துப்பொன்னிற மானவுடன் கத்தரிக்காய் 

         மற்றும் உப்பைச் சேர்க்கவும்.

    5. அரிசியைக் கொட்டிச் சிறிய தீயில் வைத்து மூடி விடவும்,   

    6. அவ்வப்போது கிளறிவிட்டு அரிசி வெந்த பிறகு 

        அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.








No comments:

Post a Comment