வட இந்தியச் சமையல்
ஸர்வாரி ( கொண்டைக்கடலை சாதம்)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - 50 கிராம்
இலவங்கம் - 2
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு .
செய்முறை:
1. கடலையைச் சமையல் சோடா சேர்த்துப் போதிய அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் இரவு ஊறவைக்க வும்.
2. மறு நாள் கழுவி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. அரிசியைக் கழுவிக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் வேகவைத்து எடுக்கவும்.
4. ஓர் அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் பரப்பி உப்பைத் தூவவும்.
5. வாணலியில் நெய்விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், இலவங்கம் தாளித்து சாதத்தின் மேல் பரவ வாகக் கொட்டவும்.
6. வேகவைத்த கடலையைச் சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி அடுப்பின் மேல் மேலும் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment