புளிசேரி
தேவையானவை:
மாம்பழம் - ஒன்று
(கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்.
தேங்காய்த்துருவல் - ஒரு கப்,
மிளகு சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2 (விழுதாக்கவும்),
தயிர் - ஒரு கப்
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2,
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. தேங்காய்த்துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மாம்பழத் துண்டுகளுடன் மஞ்சள் தூள், சர்க்கரை, மிளகாய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
3. அதனுடன் அரைத்த விழுது, உப்புச் சேர்த்து கொதிக்க விடவும் .
4. பின்னர் கடைந்த தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, எரிசேரியுடன் கலந்து பரிமாறவும்
புளிசேரி தயார் !!!
No comments:
Post a Comment