அதிரசம்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா - அரை டீஸ்பூன்,
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
1. அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை வெள்ளைத்துணியில் பரப்பி, நிழலில் நிமிடம் உலர்த்தவும்.
3. பின்னர் அதை மாவாக அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும்.
5. வெல்லம் நன்றாகக் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் காய்ச்சவும்
6. உருட்டு பதத்தில் பாகு இருக்க வேண்டும்
(ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் வெல்லப்பாகை சிறிது விட்டால், அது கரையாமல், விரலால் திரட்டினால் அப்படியே உருண்டு வர வேண்டும். இதுதான் சரியான பதம்),
7. அரிசி மாவுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
8. பாகு சரியான பதம் வந்தவுடன் அரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறி மாவின் மீது லேசாக நெய் தடவி, காற்று புகாத டப்பாவில் ஒரு நாள் முழுக்க வைத்திருக்கவும்
9. மறுநாள் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நெய் தடவிய வாழை இலையில் வைத்துத் தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து அதிரசங்களிலுள்ள எண்ணெயை வடிக்கவும்.
அதிரசம் தயார்.
No comments:
Post a Comment