உணவே மருந்து -1
கறிவேப்பிலை
நாம் உணவிலிருந்து தூக்கி எறியும் கறிவேப்பிலையில் உள்ள கால்சியம், அயர் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் ரத்தசோகையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, இஞ்சி இவை மூன்றும் ஜீரணத்துக்கு நம் வீட்டிலேயே இருக்கும் அருமருந்துகள். சிறுநீர்ப் பிரச்னைகள், வாந்தி, சருமப் பிரச்னைகள் போன்றவற்றைச் சரிசெய்யும். தலைமுடி வளர்ச் சிக்கு உதவுகிறது. உணவில் தினமும் சேர்க்கும் போது இதன் குளிர்ச்சித்தன்மை கோடையில் வரும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வா கிறது. பொடி செய்தும், சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்துத் துவையல் செய்தும் சாப்பிடலாம். அனைத்துக் காய்கறிகள் சமைக்கும்போதும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை களைத் தூக்கி எறியாமல் சாப்பிடுவது மலச்சிக்கலை நீக்கி வாயு போன்ற தொல்லைகளைத் தவிர்க்கும். இதையும் அரைத்து, பனங்கற் கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடல் எடை குறையும்.
புதினா
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சைக்கு ஈடான மருத்துவக் குணம் கொண்டது புதினா, இதிலுள்ள விட்டமின் சி மற்றும் மென்தால் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னை சுளுக்கு நல்ல தீர்வைத் தரும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் நறுமணம் வாந்தியைக் கட்டுப்படுத்தும் என்பதால், கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் நல்லது. வெப்பத்தினால் வரும் மூல நோய்க்கும், நரம்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தா கிறது. பசியைத் தூண்டும், புதினாவை எப்படிப் பயன்படுத்தினாலும் அதன் சத்துக்கள் அழியாது என்பது இதன் தனிச் சிறப்பு. புதினாவை நிழலில் உலர்த்திப் பொடித்து, ஒரு பிடியை ஒரு லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50மி.லி. அருந்தினால் காய்ச்சல் குணமாகும். உணவுக்கு முன் புதினாவை சுடுநீரில் போட் டுக் கொதிக்கவைத்து அதை வடிகட்டி அதனுடன் தேன், நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும்.
சின்ன வெங்காயம்
சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத் தில் மருத்துவக் குணங்கள் அதிகம். இதிலுள்ள சல்பைடு, தைலான்ஸ், பைநோல் போன்ற வேதிப்பொருள்கள் உடல் நலனுக்கு உகந்தது. இதன் சாறு விஷத்தன்மையை நீக்கும். பூச்சிக்கடிகளுக்கு உடனடி நிவாரணமாக, கடிபட்ட இடத்தில் இதைத் தேய்ப்பதன் மூலம் விஷத்தை முறிக்கலாம். வெங்காயத்தைக் கூடுமானவரை பச்சையாகச் சாப்பிட்டால் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும் முடியாதவர்கள் காய்கறிகளில் சேர்த்தோ , துவையல் செய்தோ சாப் பிடலாம். வெங்காயத்தில் குறைந்த அளவே கொழுப்புச்சத்து உள்ளதால் உடல் பருமனானவர்களும் தயங்காமல் இதை அதிகம் உணவில் சேர்க்கலாம். உடல் வெப்பம் குறையும். அதிகச் சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலிக்கு அற்புதமான மருந்து இது
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆல்பா/கூமின் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் பல நோய்களுக்கு மருந்தாகிறது ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தருகிறது. வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, நீர்ச்சத்துக் குறைபாடுகளைச் சரிசெய்கிறது. ரத்தநாளங்களில் படிந்துள்ள கொழுப்பை நீக்கும். இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சேரும் டாக்ஸின் எனும் நச்சுப்பொருளை அகற்றி ஆரோக்கியத்தைத் தருகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து பருகலாம். தேன் கலந்த இஞ்சிச் சாறு பலவற்றுக்கு நிவாரணமாக அமைந்தாலும், அதைத் தொடர்ந்து 40 நாட்கள் பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரைந்து தொப்பை குறையும். இதனால் உடல் எடை குறைந்து மெலிதான தோற்றம் பெறலாம். ஆனால், அதனுடன் உணவுக்கட்டுப்பாடும் அவசியம். இந்தச் சாறு அஜீரணத்துக்கும், வயிற்றுவலிக்கும் மிகவும் நல்லது. இஞ்சியின் மேல் தோலில் நச்சுப் பொருள் உள்ளதால் அவசியம் மேல் தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும்
பூண்டு
தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும். மேலும் அது இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது. பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
No comments:
Post a Comment