கத்திரிக்காய் சாதம்
தேவையானவை:
வடித்த சாதம் - ஒரு கப்,
கத்திரிக்காய் துண்டுகள் - அரை கப்,
வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -
தலா - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு தேவையான அளவு
பொடி செய்ய:
தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
1. பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை வெறும்
வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
2 . பிறகு, அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
3. இதனுடன் வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
4. பிறகு உப்பு, அரைத்த பொடி, சாதம் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
5. மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment