Monday, February 1, 2021

உணவே மருந்து -3

 


                     உணவே மருந்து  -  3


               வெந்தயம்


              வெந்தயத்தில் உள்ள அல்காலைட்ஸ் எனும் பைட்டோ கெமிக் கல்ஸ், உணவினால் ஏற்படும் அஜீரணத்தை விரட்டி ஜீரணத்தை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண்களைக் குணப்படுத் தும். ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதிலுள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்துக் கொதிக்கவைத்து அதில் தேன் சேர்த்து தினமும் பருகி வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறையும். மேலும் இது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும். தாய்ப் பால் ஊட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது. பொடுகுத் தொல்லை சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும், வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வெப்பத்தினால் வரும் உடல் சூடு குறையும், ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இதற்கு முக்கியப் பங்குண்டு.


                எள்ளு


            அயர்ன, மெக்னீசியம், மாங்கனைஸ், காப்பர், விட்டமின் பிடஎன்று அதிக சத்துக்களை உள்ளடக்கிய எள்ளு ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழ மொழி. அதாவது எள்ளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் பலம் கூடும். மேலும் இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வளர் இளம் பெண்களுக்கு உடல் பலத் தைத் தரும் எள்ளு கலந்த உணவுகள் அவசியம் தேவை. ஆனால் இது கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளை அகற்றும் செயல்புரிவதால் கர்ப்பிணிப்பெண்கள் ஐந்து மாதம் வரை எள்ளைத் தவிர்ப்பது நல்லது. காலையில் ஒரு பிடி என்ளை ஊறவைத்து உண்பது நல்லது அப்படி முடியாதவர்கள் எள்ளுருண்டை , எள்ளுப்பொடி, எள்ளு சாதம் என்று எள்ளை அன்றாடம் நாம் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பெறலாம்.


           கொள்ளு



             கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழிக்கு ஏற்ப உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ஊளைச்சதையையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது உடலுக்கு வெப்பத்தைத் தரக் கூடிய உணவுப்பொருள் என்பதால், வாரம் ஒரு முறை சேர்க்கலாம் உணவில் சேர்த்து பாதிப்புகள் இல்லை எனும்போது உடல் எடை குறைய தினம் பயன்படுத்தலாம். இதில் இரும்புச்சத்து உள்ளதால் பெண்களின் மாதவிடாய் ஒழுங்குக்கும் சிறந்த தீர்வாகிறது. கொள்ளும், அரிசியும் சேர்த்துச் செய்யும் கஞ்சி பசியைத் தூண்டும் அரிசியையும், கொள்ளையும் வறுத்து, குக்கரில் வேகவைத்து, உப்பு சீரகம் சேர்த்துக் கஞ்சி வைத்து, புதினாத் துவையலைத் தொட்டுக் கொள்ளலாம், ஏனெனில் புதினாவின் குளிர்ச்சித் தன்மை கொள்ளு வில் உள்ள வெப்பத்தைச் சமன்படுத்தும். கொள்ளை இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரைக் குடிக்கலாம், இதில் மாவுச்சத்து உள்ளதால் சுண்டல் செய்தும், வேகவைத்தும் சாப்பிடலாம்.


                சீரகம்



               நம் அகத்தைச் சீர்செய்வதில் சீரகம் இணையற்றது இதிலுள்ள டேனின், நெகிலின் போன்ற சத்துக்கள் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன இதை நீரில் கொதிக்கவைத்து அருந்தும் போது கிடைக்கும் பலன்கள் அதிகம், காமாலை, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் சளித் தொந்தரவு போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து. கேன்சர் வராமல் தடுக்கும். ஷகரைக் கட்டுக்குள் வைக்கும். மோரில் கலந்து குடித்தால் உடனடியாக உடல் வெப்பம் குறையும். காய்ச்சலுக்குச் சரியான தீர்வு. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி உடலைச் சமநிலைப்படுத்தி எடையைச் சீராக வைத்திருப்பதில் சீரகம் பெரும் பங்குவகிக்கிறது. ஒரு லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க, சிறுநீர்ப் பிரச்னைகள் குறையும், தினமும் சீரக நீரை அருந்தினால் கண்டிப்பாக நம் உடல் நலம் சீராகும்.


பெருங்காயம்


  
       பெருங்காயத்தில் மாலிக் ஆசிட், வோலெட் போன்ற சல்பைடு கள் உள்ளதால் வாயுத்தொல்லைக்கு அருமருந்தாகிறது. கல்லீரல் வீக்கம், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்றவை களுக்கு நிவாரணமளிக்கும். இதன் குளிர்ச்சித் தன்மை உடல் வெப் பத்தைக் குறைக்கும். வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும் தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் எளிதில் ஜீரணமாகி மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாக்கும். குடல் புழுக்களை அழித்து, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் போன்றவை வராமல் காக்கிறது. வெயில் காலத்தில் உணவுகளால் வரும் ஒவ்வாமையை நீக்கி உடலைக் கட்டுக்குள் வைக்கிறது. தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை உடலுக்குச் சேர்ப்பது நல்லது.



            மிளகு


            பத்து மிளகு இருந்தால் பகையாளியும் உறவாவான். பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் மிளகைப் பயன் படுத்தலாம். இதன் பலன்களும் அதிகம், இதில் உள்ள பெப்டின் எனும் வேதிப்பொருள் நச்சுத்தன்மை நீக்கும் குணம் கொண்டது. இது ஆஸ்துமா, மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் அனைத்து வகையான உடல் வலிகளுக்கும் அருமருந்தாகும் உணவினால் ஏற்படும் விஷத் தன்மையை நீக்கும். இதன் வெளிப்புற அடுக்கு கொழுப்பின் காரணமாக உடலில் உருவாகும் கட்டிகளை முறிப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரு கிறது. வெயிலினால் உடலில் சேரும் வியர்வையை வெளியேற்றி எளிதில் சிறுநீரைக்கழிக்க உதவுகிறது. இதிலுள்ளஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றுப் பிரச்னைகளைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. சுடுநீரில் மிளகுத்தூள், மஞ்சள் சேர்த்துக் குடித்தால் சளித்தொந்தரவு, காய்ச்சல் சரியாகும்.


              கிராம்பு



            எங்கு பார்த்தாலும் கேன்சர் பரவும் அபாயம் இருப்பதால் அந் நோயைத் தவிர்க்க நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டிய மருந்துப்பொருள் இது இதிலுள்ள வோலடைல் எனும் எண்ணெய் போன்ற சத்துப் பொருள் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து உடல் நலனைக் காக்கிறது. சிறந்த வலி நிவாரணியாகவும் பயன் தருகிறது இது பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும், வாய் துர்நாற்றத்தையும் போக்கும், அல்சர், கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் இதிலுள்ள ஏராளமான வேதிப்பொருள்களும், விட்டமின்களும் உடலில் தோன்றும் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் அன்றாடம் நம் சமையலில் சேர்க்கும் கிராம்பு, நறுமணத்தைத் தந்து எளிதில் உணவு ஜீரணிக்கவும் உதவுகிறது, கிராம்புகளை நீரில் கொதிக்கவைத்துத் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும். உடல் எடை குறைப்புக்குக் கிராம்பு நேரிடையாகப் பயன்தராமல் மறைமுகப் பொருளாகப் பயன்படுகிறது, காரணம் உடலின் நச்சுத்தன்மையைக் நீக்கி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.


                மஞ்சள்


              மிகச்சிறந்த கிருமிநாசினி மஞ்சள், இதில் குக்குமின் ஜிஞ்சரோல் போன்ற வேதிப்பொருள்களுடன் விட்டமின் பி.எ சத்தும் நிறைந்திருப்பதால் இது சிறந்த ஆன்டி பயாட்டிக்காகச் செயல்படுகிறது. கேன்சர் வராமல் தடுக் கிறது. கொப்புளங்கள், சிழ்க்கட்டிகளைக் குணப்படுத்துகிறது. குளிக்கும் போது நீரில் கலந்தோ அல்லது உடலில் பூசியோ குளித் தால் உடல் துர்நாற்றம் வராது ஹீமோபிலியாவினால் பாதிக்கப் பட்டவர்கள் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும், மூட்டு வலிக்கு மஞ்சள் அரைத்துப் பற்றுப் போடலாம். பெருங்காயத்தூளுடன் மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆவிபிடித்தால் ஒற்றைத் தலைவலி மறையும். மஞ்சளுடன் வேப்பிலைக் கொழுந்துகளை அரைத்துப் பூசினால் வெயிலினால் தோன்றும் கொப்புளங்கள் போன்ற சருமப் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும், சுடுநீரில் கலந்து குடிக்கும் போது காய்ச்சல், சளிக்கு உடனடி நிவாரணம் தரும். இதிலும் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்து இருப்பதால், இதை அன்றாடம் நம் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.










No comments:

Post a Comment