Monday, February 1, 2021

பறங்கிக்காய் பால் கூட்டு

 


                       பறங்கிக்காய் பால் கூட்டு



    தேவையானவை

     இளம் பறங்கிக்காய் - ஒன்று, 

     பச்சரிசி  ஒரு உஸ்பூன், 

     தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன், 

     பச்சைமிளகாய் - ஒன்று, 

     காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், 

     சர்க்கரை அல்லது வெல்லம் - 2 டீஸ்பூன், 

     கறிவேப்பிலை - சிறிதளவு 

      உப்பு - தேவையான அளவு


செய்முறை

       1. பறங்கிக்காயை சதுர வடிவ துண்டுகளாக்கி வேக வைக்கவும். 

       2. பச்சரிசியை ஊற விடவும். தேங்காய்த்துருவலுடன் பச்சைமிளகாய், அரிசி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

      3.  வேகவைத்த காயுடன், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து கொதி விடவும். 

      4. பின்னர் பால், சர்க்கரை சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்

        உருளைக்கிழங்கு, சுரைக்காய், பூசணி, சௌசௌ போன்ற காய்களிலும் இதே முறையில் பால் கூட்டு செய்யலாம்.



No comments:

Post a Comment