ஐந்து வகை சுண்டல்
கடலைப் பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1/4 கிலோ,
தேங்காய் துருவல் - 1 கப்,
காய்ந்த மிளகாய் சுடுகு 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. இதைக் குக்கரில் வைத்து திட்டமாக தண்ணீர் ஊற்றி,
உப்பு போட்டு 2 விசில் வைத்து வேக வைத்துக்
கொள்ளவும்
3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்
பருப்பு காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை
தாளித்து, கடலைப் பருப்பு சுண்டலில் கொட்டி மேலாக
கொத்துமல்லி தூவவும்.
ஊறவைக்காமல் அப்படியே களைந்தும் வேக வைக்கலாம்.
**************
காராமணி சுண்டல்
தேவையான பொருட்கள்:
காராமணி - 1/4 கிலோ,
வெல்லம்- 1/4 கிலோ
ஏலத்தூள்- 1/4 டீஸ்பூன்,
உப்பு - சிட்டிகை,
செய்முறை:
1. காராமணியை காலையில் ஊறவைத்துக் கொள்ளலாம்
2. காராமணியை களைந்து, சிட்டிகை உப்பு போட்டு மூன்று விசில் வைத்து வேகவிடவும்.
3. அரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை உடைத்துப் போட்டு
லேசாக கெட்டிப் பாகெடுத்துக்கொள்ளவும். வெந்த
காராமணியை வெல்லப் பாகில் கொட்டி ஏலத்தாளும்
சேர்த்து கலக்கவும்
4. காராமணியை ஊற வைக்க மறந்து விட்டால்,
வெந்நீரில் அரை மணிநேரம் ஊறவைத்துக்
கொண்டு பின்னர் வேக வைக்கலாம்.
*******************
பச்சைப் பயறு சுண்டல்
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு-1/4 கிலோ,
உளுத்தம் பருப்பு, கடுகு, எண்ணெய் தலா-1டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2,
தேங்காய்த் துருவல் .1/4 கப்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சைப்பயறை 10 மணி நேரம் ஊற வைத்து களைந்து
உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.
2. கடாயில், கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து தேங்காய்
துருவலுடன் வெந்த பச்சைப் பயறில் கொட்டிக்
கலக்கவும்.
*********************
பயத்தம் பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு-1/4 கிலோ,
உளுத்தம்பருப்பு, கடுகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2,
தேங்காய்த் துருவல் .1/4 கப்,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது,
எண்ணெய்- 1 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு
செய்முறை:
1. பயத்தம் பருப்பை சிறிது உப்புப் போட்டு குக்கரில்
1 விசில் வைத்து வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாய்,
பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, தாளித்து வெந்த பயத்தம் பருப்பில்
கொட்டிக் கிளறவும்.
3. பின்னர் தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய
கொத்துமல்லியை மேலாகத் தூவவும்.
**********************
வேர்க்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை -1/4 கிலோ,
உளுத்தம்பருப்பு, கடுகு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2,
தேங்காய்த் துருவல் -1/4 கப்,
எண்ணெய்-1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வேர்க்கடலையை காலையில் ஊறவைத்து
மாலையில் குக்கரில் வைத்து உப்பு போட்டு
மூன்று விசில் விட்டு வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு,
கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை தாளித்து, வேர்க்கடலை, சுண்டலில்
கொட்டிக் கலக்கவும்.
3. மேலாக தேங்காய்த் துருவலைத் தூவவும்.
********************************
No comments:
Post a Comment